அய்யன்கொல்லி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

அய்யன்கொல்லி அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2021-06-13 16:38 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, தட்டாம்பாறை, குழிக்கடவு, கருத்தாடு, செம்பக்கொல்லி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

மேலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை மிதித்து சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டப்பாடி பகுதிக்குள் 2 காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து விவசாய பயிர்களை காட்டு யானைகள் மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. பின்பு குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன.  இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

 பின்னர் காட்டு யானைகள் அருகில் உள்ள காபி தோட்டத்திற்குள் புகுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிதிர்காடு வன காவலர் சுப்பிரமணியம் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்