கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு தனிதாசில்தார் உள்பட 3 பேர் மீது வழக்கு.

Update: 2021-06-13 15:55 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் கடந்த 9-8-2019 அன்று கிராம உதவியாளர் பணிக்கு பலர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து நேர்காணல் நடத்துவதற்காக அந்த ஆவணங்கள் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆவணங்களை அலுவலர்கள் சிலர் திருடியதாக தெரிகிறது. இது குறித்து கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவுப்படி, தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் திருடியது தொடர்பாக தற்போது விழுப்புரம் ஆதிதிராவிடர் நல தாசில்தாராக பணியாற்றி வரும் தயாளன், உளுந்தூர்பேட்டை தேர்தல் துணை தாசில்தார் பாண்டியன், கல்வராயன்மலையில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் தசரதன் ஆகிய 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தயாளன் தாசில்தாராகவும், பாண்டியன், தசரதன் ஆகியோர் அலுவலர்களாகவும் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்