சூதாடிய 16 பேர் கைது
விருதுநகரில் சூதாடிய 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர்அருகே உள்ள எட்ட நாயக்கன்பட்டி கிராமத்தில் சூலக்கரை போலீசார் ரோந்து சென்ற போது அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 45), கருப்பையா (62), ராமகிருஷ்ணன் (31), சசிகுமார் (36), சபரிராஜ் (46), சின்ன முனியன் (53), முருகேசன் (42), பாலகிருஷ்ணன் (43), சிங்கராஜ் (55) ரவி (47), போஸ் (60), வேல்முருகன் (60), பாலகிருஷ்ணன் (46) உள்பட 16 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து சூதாடிய ரூ.4553-ஐ பறிமுதல் செய்த சூலக்கரை போலீசார் 16 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.