வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசு திருட்டு
பழவூர் அருகே வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசை மர்மநபர் திருடிச் சென்றார்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே சிதம்பராபுரத்தில் ஓடக்கரை உச்சிப்புள்ளி மாயவர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலை திறந்து, உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்றுவிட்டனர். மேலும் கோவிலை அடுத்து ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் கதவை உடைத்து, பீரோவையும் உடைத்து அதில் இருந்த வெள்ளி கொலுசை திருடிச் சென்றுள்ளனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ப நபர்களை தேடி வருகின்றனர்.