சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-12 17:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த சதீஷ்குமார் தலைமறைவு ஆனார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் நேற்று பழைய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த சதீஷ்குமார் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி விசாரணை நடத்தினார். அதன்பிறகு சதீஷ்குமார் தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்