திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி

திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளி பலி

Update: 2021-06-12 17:09 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா புதுப்பேட்டையை அடுத்த அத்தியூர் பகுதியை சார்ந்த பெரியசாமி மகன் முத்து (வயது 35). இவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.  நேற்று திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோடில் உள்ள தனியார் கல்லூரியில் மேற்கூரை அமைக்க முத்து வந்துள்ளார். அங்கு கல்லூரி 2-வது மாடியில் வெல்டிங்பணியை தொடங்கியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து கல்லூரி பேராசிரியர்கள் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி முத்துவின் மனைவி ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்