தாசில்தாரிடம் பெண்கள் மனு

நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக தாசில்தாரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2021-06-12 15:49 GMT
ராமேசுவரம், ஜூன். 13-
ராமேசுவரம் சங்குமால், ஓலைகுடா, மெய்யம்புளி, செம்ம மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தனியார் நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் சங்குமால் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ஏராள மானோர் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஜெரோன்குமார் தலைமையில் நேற்று ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் மனு கொடுக்க வந்தனர். அவ்வாறு வருகை தந்த பெண்கள் தாசில்தாரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மண்டபத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி உள்ளது. கடந்த 3 மாதமாக ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் இந்த கடன் தொகையின் தவணை செலுத்த முடியவில்லை. நிதிநிறுவனம் மாதத் தவணை மற்றும் வட்டியுடன் கூடுதலாக கட்ட வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருகிறது. வட்டியுடன் கூடுதல் பணம் கட்ட வலியுறுத்தி நிதிநிறுவனத்தினர் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே  மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்