ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 115 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 18 ஆயிரத்து 682 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 371 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 285 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது ஆயிரத்து 96 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 301 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 190 பேர் குணமடைந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.