சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 179 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கருப்பு பூஞ்சை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கருப்பூ பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.