தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
3 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
மதுரை,ஜூன்.
மதுரையில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 3 நாட்களாக யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் மதுரைக்கு வந்தடைந்தன. அதைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது. குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வந்துள்ளதால் கோவேக்சின் 2 தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிப்பு எதுவும் தெரிவிக்காததால் தடுப்பூசி போடப்படும் மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் இது வரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.