டீக்கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

திருச்சுழியில் டீக்கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-11 19:59 GMT
காரியாபட்டி, 
 திருச்சுழி நகர்ப்பகுதியில் பஸ்நிலையம் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக டீக்கடைகள் செயல்படாத காரணத்தால் கடை மூடி இருந்தது. நேற்று செந்தில்கடைக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று போவதை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் கடை உரிமையாளருக்கும், திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து அங்கு வந்த தீயணைப்புபடை வீரர்கள் டீக்கடையில் விறகுகளில் மறைந்திருந்த நல்ல பாம்பை  பிடித்தனர். பிடிக்கப்பட்ட நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக காட்டுப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்