காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-11 19:38 GMT
அரியலூர்:

கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அரியலூரில் மேல அக்ரஹார தெருவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் ஊரடங்கு காலத்தில் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ, கார், லாரிகள் வைத்து தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்து, விலை உயர்வை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்