ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4,800 கோடி கடன் வழங்க இலக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4,800 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-06-11 18:05 GMT
ராணிப்பேட்டை

வங்கி அதிகாரிகள் கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்தியன் வங்கி, முன்னோடி வங்கி சார்பில் மாவட்டத்தில் வருடாந்திர வங்கி கடன் ரூ.4,803 கோடியே 92 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட, இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ரூ.4,800 கோடி இலக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். இம்மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க வங்கியாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும் விவசாய கடனாக ரூ.2,875 கோடியே 60 லட்சம், சிறு குறு தொழில் கடனாக ரூ.702 கோடியே 81 லட்சம், இதர முன்னுரிமை கடனாக ரூ.1,225 கோடியே 51 லட்சம் என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 803 கோடியே 92 லட்சம் வழங்கிட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் தொகையை குறித்த காலத்திற்குள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்