கொரோனா தகவல்களை அறிந்துகொள்ள புதிய இணையதளம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய இணையதளத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-11 17:30 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய இணையதளத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், அதிகாரப்பூர்வ தகவல்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாகவும் http://ramanatha  puramfightscovid.com/ என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பரிசோதனை மையங்கள், சிகிச்சைக்காக உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அரசாணைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெளியிடப்படும்.
கட்டளை மையம்
 அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகள், கொரோனா கட்டளை மையத்தின் தொடர்பு எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே கணினி அல்லது கைபேசியின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். 
இந்த இணைய தளத்தின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். 
அப்போது, கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், உதவி கலெக்டர்கள் சரவணகண்ணன், அர்ச்சனா உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்