செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழப்பு 726 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 726 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 726 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,146 ஆக உயர்ந்தது. இதில் 5,588 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 294 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 63 ஆயிரத்து 493 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,077 உயர்ந்துள்ளது. 2,328 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.