சேலம்:
சேலம் லைன்மேடு பகுதியில் நேற்று காலை ஆந்தை ஒன்று அறுந்த பட்டத்தின் நூலில் சிக்கி சாலையில் பறக்க முடியாமல் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த ஆந்தையை பிடித்தனர். பின்னர் சிறகுகளில் சிக்கிய பட்டத்தின் நூலை அவர்கள் அகற்றினர். இதையடுத்து இந்த ஆந்தை சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த அரியவகை ஆந்தையை வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.