பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
சிவகிரியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
சிவகிரி, ஜூன்:
சிவகிரி நகரப்பஞ்சாயத்து 13-வது வார்டு சந்தி விநாயகர் கோவில் தெருவிலும், 15-வது வார்டு சித்தி விநாயகர் கோவில் தெருவிலும் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய், சிவகிரி நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் ஆகியோர் தொடங்கி முகாமை வைத்தனர். டாக்டர் லியோ தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சரபோஜி, விஷ்ணுகுமார், ராஜாராம், நவராஜ், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.