இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி பலி
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி பலி
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்தவர் நூருதுஅம்மாள்(வயது 70). இவர் டி.எம்.கோட்டை என்ற கிராமத்திற்கு, தனது உறவினர் ராஜசேகர்(33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, மூதாட்டியின் சேலை, இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிகொண்டதால் மூதாட்டி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெருநாழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.