காரைக்குடி நா.புதூர் மகாகவி பாரதியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் வாடகைக்கு கார்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி யோகேஸ்வரி.இவர் கானாடுகாத்தானில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார், அவரை பார்ப்பதற்காக மணிகண்டன் காரில் சென்றார்.மனைவியை பார்த்துவிட்டு ராஜா வீதியில் தனது மனைவியின் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் காரைக்குடி வந்தார். மறுநாள் சென்று பார்த்தபோது காரை காணவில்லை.காரின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து மணிகண்டன் செட்டிநாடு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குபதிவு செய்து திருடு போன காரை தேடி வருகிறார்.