சாராயம் விற்றவர் கைது

சாக்கோட்டை அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-08 17:36 GMT

காரைக்குடி,
சாக்கோட்டை போலீஸ் சரகம் கல்லூர் ரெயில்வே கேட் அருகே சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையொட்டி சாக்கோட்டை போலீசார் அப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 37) என்பவர் அப்பகுதியில் சாராயம் விற்பதை கண்டறிந்தனர்.உடனடியாக சந்திரசேகரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.



மேலும் செய்திகள்