வாலாஜாவில் விதிகளை மீறிய 3 கடைகளுக்கு ‘சீல்’
வாலாஜாவில் விதிகளை மீறிய 3 கடைகளுக்கு ‘சீல்’
வாலாஜா
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் தலைமையில் கடைகள் திறந்து உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து கொண்டிருந்த மூன்று கடைகளுக்கு சீல் வைத்து, ரூ.4,500 அபராதமும் வசூல் செய்யப்பட்டது.
பொறியாளர் நடராஜன், துப்புரவு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், களப்பணி உதவியாளர் மகேந்திரன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விநாயகம், ஆறுமுகம், தாவூத் ஆகியோர் உடன் இருந்தனர்.