ஓட்டப்பிடாரம் அருகே சாராயம் காய்ச்சிய முதியவர் கைது

ஓட்டப்பிடாரம் அருகே சாராயம் காய்ச்சிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-08 16:44 GMT
ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தில் காட்டுப் பகுதியில் சாராயம் காய்ச்சி வருவதாக பசுவந்தனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையில் போலீசார் காட்டுப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சிகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (வயது 65) என்பவர் சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், சங்கிலிபாண்டியை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள்

மேலும் செய்திகள்