ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சசிமோகன் பதவிஏற்பு
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சசிமோகன் பதவி ஏற்றுக்கொண்டார்
ஈரோடு
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சசிமோகன் பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தங்கதுரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக, ஐ.பி.எஸ் அதிகாரி சசிமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்ட சசிமோகன் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியை ஏற்றுக்கொண்டார்.
புகார் அளிக்கலாம்
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணியை முதன்மை பணியாக கொண்டு செயல்படுவோம். பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதுகுறித்து, 9488010684 என்ற என்னுடய வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
புகாரில் உண்மை தன்மை இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தயக்கமின்றி புகார்களை அளிக்கலாம். பொது மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் போலீசார் செயல்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.