சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மகேஸ்வரி பொறுப்பேற்பு

சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மகேஸ்வரி பொறுப்பேற்றார்

Update: 2021-06-07 20:58 GMT
சேலம்:
சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பிரதீப்குமார் பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதேபோல் தலைமையக டி.ஐ.ஜி.யாக இருந்த மகேஸ்வரி சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை சேலம் சரக டி.ஐ.ஜி.யாக மகேஸ்வரி பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்