வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள்

பணகுடியில் வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-06-07 19:58 GMT
பணகுடி, ஜூன்:
கொரோனா தடுப்பு ஊரடங்கால் பணகுடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரம் நலிவடைந்து வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பாக பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து வியாபாரிகள் சங்க தலைவர் விசுவநாதன் தலைமையில், செயலாளர் நட்ராஜ் முன்னிலையில் 150-க்கும் அதிகமான வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்