சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்

சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்.

Update: 2021-06-07 18:22 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களை தனிமைப்படுத்த வசிப்பிடத்துக்கு சுகாதாரத்துறையினர் சென்றனர். ஆனால் அதில் 4 பேர் சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓடிவிட்டனர். உடனே அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்டபெட்டு பஜாரில் சுற்றித்திரிவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்தனர். 

தொடர்ந்து அவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 பேரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர். மேலும் அவர்கள் மருந்து வாங்கி சாப்பிட்ட கடையை மூடினர். அதன் உரிமையாளரை கொரோனா பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்