முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-07 18:20 GMT
கோவை

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உள்பட பல்வேறு துறையினர் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கக்கோரி எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் கோவை குட்செட் சாலை அருகே பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜோன்ஸ் சபாஸ்டியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு.வை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 

அத்துடன் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிரதமர் மோடி, ரெயில்வே மந்திரி ஆகியோருக்கு டுவிட்டரிலும் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து எஸ்.ஆர்.எம்.யு. சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் கூறும்போது, இந்த இக்கட்டான காலகட்டத்தில் சரக்கு ரெயில் சேவை மூலம் ரெயில்வே துறைக்கு வருமானம் ஈட்டி தருகிறோம். 

இதுவரை ரெயில்வேயை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

எனவே எங்களையும் முன்களபணியாளராக அறிவிக்க வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்