கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 323 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 4 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 323 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-07 18:18 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 45 வயது ஆணும், 77 வயது முதியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதே போல ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண்ணும், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 310 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்து 462 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 ஆயிரத்து 915 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 314 தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்