திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4,214.91 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம். கலெக்டர் சிவன்அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4,214.91 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

Update: 2021-06-07 17:43 GMT
திருப்பத்தூர்

வங்கி அதிகாரிகள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வங்கி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட, இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் கிருஷ்ணராஜ் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ரூ.4,214.91 கோடி இலக்கு நிர்ணயம்

மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைவிட அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். இம்மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்கிட வங்கியாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும் விவசாயக் கடனாக ரூ.2,663.89 கோடி, சிறு, குறு தொழில் கடனாக ரூ.500.72 கோடி, இதர முன்னுரிமை கடனாக ரூ.1,050.30 கோடி என மொத்தம் ரூ.4,214.91 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடன் தொகையை  குறித்த காலத்திற்குள் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

மேலும் செய்திகள்