கமிஷன் கடைகளில் காய்கறி, பழங்கள் விற்பனைக்காக குவிந்தன
கமிஷன் கடைகளில் காய்கறி, பழங்கள் விற்பனைக்காக குவிந்தன.
கீரமங்கலம், ஜூன்.8-
கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, செரியலூர், கரம்பக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பூ, காய்கறி, பழங்கள், தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் அனைத்து உற்பத்தி பொருட்களும் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டதால் கீரமங்கலம், கொத்தமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகளுக்கு காய்கறி, பழங்கள் விற்பனைக்கு குவிந்தன. ஓரளவு விற்பனை விலை கிடைத்துள்ளது. கமிஷன்கடைகளில் வாங்கப்பட்ட காய்கறி, பழங்கள், பச்சை மிளகாய் ஆகியவை புதுக்கோட்டை, மதுரை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி உள்பட பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.