பாகூரில் பராமரிப்பின்றி கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பு கட்டிடம்

தற்போது கொரோனா தொற்று பரிசோதனை, தடுப்பூசி போடுவதற்காகவும் கூட்டம் அலைமோதி வருகிறது.

Update: 2021-06-07 14:19 GMT
பாகூர், 

பாகூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா தொற்று பரிசோதனை, தடுப்பூசி போடுவதற்காகவும் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்தநிலையில் இங்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பின்புறம் உள்ள குடியிருப்பு கட்டிடம் போதிய பராமரிப்பு செய்யாததால் ஊழியர்கள் தங்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் புதர் மண்டிக் கிடப்பதால் விஷசந்துகளின் புகலிடமாக திகழ்கிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே அந்த குடியிருப்பை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்