காப்பகத்தில் 5 முதியோருக்கு கொரோனா
காப்பகத்தில் 5 முதியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் உள்ள மதுரை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறமாக நகர்புற வீடற்ற ஏழைகள் மற்றும் முதியோர் தங்கும் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செயயப் பட்டது. அதில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 5 முதியோர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அரசுமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து காப்பகம் முழுவதுமாக பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. காப்பத்திற்குள் உள்ளே வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கபடாமல் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.