குன்னம் அருகே கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

குன்னம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

Update: 2021-06-06 23:48 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் பஸ் நிலையத்தில் கொரோனா தொற்று குறித்தும், தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்பணர்வு பிரசாரம் நடைபெற்றது. 

பிரசாரத்தை வேப்பூர் செல்லமுத்து தொடங்கி வைத்தார். மண்டல துணை தாசில்தார் புகழேந்தி கொரோனா பாதிப்பு குறித்தும், தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்