சேலத்தில் இசைக்கருவிகளை வாசித்து கலைஞர்கள் அரசுக்கு வேண்டுகோள் நிவாரண தொகை வழங்க வலியுறுத்தல்

நிவாரண தொகை வழங்க இசைக்கருவிகளை வாசித்து கலைஞர்கள் அரசுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-06-06 21:52 GMT
சேலம்:
நிவாரண தொகை வழங்க இசைக்கருவிகளை வாசித்து கலைஞர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இசை கலைஞர்கள்
சேலம் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோவில் திருவிழா, திருமணம், பூப்புனித நீராட்டு விழா, கிரகபிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்கள். இதுதவிர துக்க நிகழ்ச்சிகளில் இசை வாசிக்கவும் ஒரு சிலர் செல்கின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இவர்களுக்கு தொழில் சரிவர இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பல்வேறு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகை அறிவித்து வருகிறது.
அரசுக்கு வேண்டுகோள்
இந்த நிலையில், சேலம் சூரமங்கலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் திருவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இசை கலைஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்துக்கு இசைக்கருவிகளுடன் வந்தனர். பின்னர் அவர்கள் இசைக்கருவிகளை வாசித்து அரசுக்கு நூதன வேண்டுகோள் விடுத்தனர்.
அதாவது, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், நிவாரண தொகை வழங்கவும் வலியுறுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இசைக்கருவிகளை வாசித்தபடி இருந்தனர். அப்போது பல்வேறு பாடல்களையும் இசைத்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதுகுறித்து இசைக்கலைஞர் ரஞ்சித் கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனாவால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது அரசு இசை கலைஞர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. தற்போது கொரோனா 2-வது அலையால் கோவில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டதோடு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
னவே தமிழக அரசு இசைக் கலைஞர்களின் நலன் கருதி கொரோனா நிவாரண தொகை வழங்க வேண்டும். நல வாரியத்தில் அனைத்து கலைஞர்களும் பதிவு செய்யவில்லை. எனவே இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்