ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலைய பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலைய பணியை நகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-06 21:50 GMT
சேலம்:
சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பஸ் நிலையத்தில் தினமும் 2 ஆயிரத்து 839 பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பழைய பஸ் நிலையத்தினை மேம்படுத்தி, வணிக வளாகம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதிகள் மற்றும் பன்னாட்டு தரத்தில் அதிநவீன ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.92 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெறுகிறது. இந்த கட்டுமான பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்தக்காரர்களையும், அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சுரேஷ், பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்