10 நாட்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் கொரோனாவால் மனைவியும் பலி; அந்தியூர் அருகே பரிதாபம்

அந்தியூர் அருகே கொரோனாவால் கணவர் இறந்த நிலையில் அவருடைய மனைவியும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலி ஆகி உள்ளார்.

Update: 2021-06-06 20:33 GMT
அந்தியூர்
அந்தியூர் அருகே கொரோனாவால் கணவர் இறந்த நிலையில் அவருடைய மனைவியும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலி ஆகி உள்ளார். 
பெண் சாவு
அந்தியூர் அருகே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.   மேலும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்தியூர் அருகே உள்ள அத்தாணியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் நேற்று பரிதாபமாக இறந்தார்.
47 பேருக்கு கொரோனா
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் அந்த பெண்ணின் கணவர், இறந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் கணவர் மற்றும் அவருடைய மனைவி 10 நாட்கள் இடைவெளியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  
இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் 26 பெண்கள் உள்பட 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்