தடுப்புச்சுவர் மீது லாரி ேமாதியது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தடுப்புச்சுவர் மீது லாரி மோதியது.

Update: 2021-06-06 18:26 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
 தென்காசியில் இருந்து ஈரோட்டுக்கு செல்வதற்காக தேங்காய் மூடைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மடவார்வளாகம் விளக்கு பகுதிக்கு வரும்போது தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 
மேலும் லாரி ஏற்றி வந்த தேங்காய் மூடைகள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் விக்னேஸ்வரன் (வயது35) எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்