புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-06-06 17:55 GMT
புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 590 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 799 ஆக உயர்ந்து உள்ளது. 
அதே நேரம் நேற்று பூரண குணமடைந்து 986 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 10,398 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 21 பேர் பலியாகி உள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுள்ள படுக்கைகள் 357, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 862,தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 45 என மொத்தம் 1,264 படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்