வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்: 183 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 183 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-06 17:32 GMT
கிருஷ்ணகிரி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, தளி, நாகரசம்பட்டி, அஞ்செட்டி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, கல்லாவி ஆகிய 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்து வேளாண் சட்ட நகல்களை எரித்தனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 183 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்