முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.16 லட்சம்

ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.16 லட்சத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் வழங்கப்பட்டது.

Update: 2021-06-06 17:32 GMT
திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.இதேபோல் திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் நல சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.16 லட்சம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த காசோலை இணை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைவர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சங்க தலைவர் மதுசூதனன், செயலாளர் யுவராஜா, பொருளாளர் ரஞ்சித் குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்