தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு கபசுரகுடிநீர்

தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு போலீசார் கபசுரகுடிநீர் கொடுத்து அறிவுரை வழங்கினர்.

Update: 2021-06-06 17:04 GMT
வால்பாறை,

கொரோனா பரவல் 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று வால்பாறை நகர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் முன்னிலையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 அப்போது தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். மேலும் காரணமின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு, போலீசார் கபசுரகுடிநீர் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வால்பாறை பகுதியில் தேவையின்றி சுற்றிய 5 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கை மிறி வெளியே வந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர். 

இதேபோல் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள வால்பாறை, சேக்கல்முடி, முடீஸ், காடம்பாறை ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்