மாம்பாக்கம் கிராமத்தில் 30 பேருக்கு வீட்டுமனை வழங்கும் இடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
மாம்பாக்கம் கிராமத்தில் 30 பேருக்கு வீட்டுமனை வழங்கும் இடத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
கலவை
-
கலவைைய அடுத்த மாம்பாக்கம், குப்பிடிசாத்தம் ஆகிய கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரமும், நீர் நிலைகள் ஓரமும் வசித்து வரும் 30 பேருக்கு மாற்று இடத்தில் குப்பிடிசாத்தம் கிராமம் புஞ்சை அனாதீனம் புறம்போக்கு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கும் இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல் கலவை பேரூராட்சியில் பாட்டை புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் வீடு இல்லாதவர்களுக்கு கலவை தாசில்தார் தலைமையில் கணக்கெடுக்கப்பட்டு 30 பேருக்கு மாற்று இடமாக ஒரு புறம்போக்கு தோப்பு வீட்டுமனையாக ஒதுக்கப்பட்டது. அந்தத் தோப்ைப மாவட்ட கலெக்்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலவை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, மாம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் கிராம அதிகாரி ஸ்ரீதர் சிவராஜ், நில அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.