சங்கராபுரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் சாவு

சங்கராபுரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த வாலிபர் சாவு

Update: 2021-06-06 15:30 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோனஸ் மகன் வினோநித்திக்சன்(வயது 23). இவர் சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார்.  இந்த நிலையில் வினோநித்திக்சன் நேற்று முன்தினம் இரவு அவரது நண்பரின் மோட்டார் சைக்கிளில் விரியூர் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆரூர் ஏரிக்கரை அருகே வந்தபோது வினோநித்திக்சன் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்