விலை வீழ்ச்சி எதிரொலி: சாலையோரம் கொட்டப்படும் தக்காளி விவசாயிகள் கவலை

விலை வீழ்ச்சியால் தக்காளிகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன.

Update: 2021-06-06 13:32 GMT
பழனி:
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், வேலாயுதம்பாளையம்புதூர் ஆகிய கிராம பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் உள்ளது. இங்கு விளையும் தக்காளிகள் பழனி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுகள் செயல்படவில்லை. இதைத்தொடர்ந்து தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து கவலையில் உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சியடைந்து ஒரு பெட்டி தக்காளி ரூ.30 வரையில் விற்கப்படுகிறது. இதனிடையே போதிய அளவில் வியாபாரிகள் தக்காளிகளை கொள்முதல் செய்ய வருவதில்லை. இதனால் விற்காமல் இருக்கும் தக்காளியை சாலையோரத்தில் கொட்டுகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்