திருவண்ணாமலை அருகே முழு ஊரடங்கிலும் தடையின்றி நடைபெறும் விவசாய பணி
திருவண்ணாமலை அருகே முழு ஊரடங்கிலும் தடையின்றி நடைபெறும் விவசாய பணி
கலசபாக்கம்
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தமிழக அரசு கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
விவசாய பணிகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் பெண்கள் ஆர்வத்துடன் நெல் பயிரிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.