அரசு அறிவித்துள்ள தளர்வுகள் படுதோல்வியில் முடியும்: மராட்டிய பா.ஜனதா கருத்து

மாநிலத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அமல்படுத்தப்படும் போது படுதோல்வியில் முடியும் என பா.ஜனதா கூறியுள்ளது.

Update: 2021-06-06 10:16 GMT
5 வகை தளர்வுகள்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் ஆக்கிரமிப்பை வைத்து தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டம், மாநகர பகுதிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. 3-வது பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பையில் ஓட்டல், உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநில அரசு மாவட்டங்களை 5 பிரிவுகளாக பிரித்து தளர்வுகள் அறிவித்து உள்ள திட்டம் படுதோல்வியில் முடியும் என பா.ஜனதா கூறியுள்ளது.

படுதோல்வியில் முடியும்
இதுகுறித்து பா.ஜனதா மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தாரேகர் கூறுகையில், " இது உரிய திட்டமிடல் இன்றி தோராயமாக தயாரிக்கப்பட்ட தளர்வுகள் ஆகும். கொரோனா பாதிப்பு சதவீதமும், ஆக்சிஜன் படுக்கைகள் ஆக்கிரமிப்பு விவரமும் ஒத்துப்போவது இல்லை. மும்பையில் தளர்வுகள் அமல்படுத்துவதில் முரண்பாடுகள் உள்ளன. அரசு அறிவித்து உள்ள தளர்வுகள் அமல்படுத்தப்படும் போது அது படுதோல்வியில் முடியும் " என்றார்.

மேலும் செய்திகள்