தலைவாசல் அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் 36 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணானது

தலைவாசல் அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் 36 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணானது.

Update: 2021-06-05 23:26 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே சரக்கு வேன் கவிழ்ந்ததில் 36 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணானது.
சரக்கு வேன்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பட்டுத்துறையை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 26), சரக்கு வேன் டிரைவர். இவர் தலைவாசல் அடுத்த சிவசங்கராபுரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து சரக்கு வேனில் 36 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு சென்று  கொண்டிருந்தார்.
தலைவாசல் அருகே நத்தக்கரை பிரிவு ரோட்டில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேன் சென்றபோது, முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருக்க கோகுல்ராஜ், சரக்கு வேனை வலதுபுறம் திருப்பி உள்ளார்.
முட்டைகள் வீணானது
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் கொண்டு சென்ற 36 ஆயிரம் முட்டைகளும் உடைந்து வீணானது. மேலும் உடைந்த முட்டைகள் ரோட்டில் ஆறாக ஓடியது.
சரக்கு வேனில் வந்த டிரைவர் கோகுல்ராஜ், அவருக்கு உதவியாளராக வந்த ஒருவரும் என 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதையடுத்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வேனை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். உடைந்து வீணான முட்டையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்