ஆத்தூரில் 2 கடைகளுக்கு ‘சீல்’

ஆத்தூரில் 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2021-06-05 23:26 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் ஆத்தூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் உடையார்பாளையத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்து வைத்து பிளைவுட் வியாபாரம் செய்த ஒரு கடைக்கும், ஒரு மளிகை கடைக்கும் நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்