சிறுவன் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுவன் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்த நிலையில், தொற்றால் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் நேற்று இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதன்படி கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுவன், ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று 39 பெண்கள் உள்பட மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 554 ஆக அதிகரித்தது. அதேநேரம் 433 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை 25 ஆயிரத்து 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.