விதிமுறை மீறிய கடைகள் மீது வழக்கு
விதிமுறை மீறிய கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பேரையூர்,
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் கொரோனா முன் தடுப்பு நடவடிக்கையாக ரோந்து சென்றனர். அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விதிமுறை களை மீறி சுற்றித்திரிந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 11 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாத 97 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.